ஆதார் பதிவு வசதியை தமிழக அரசு பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவது எளிதாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநலத் திட்டங்கள், உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் நோக்கில், பொதுமக்களுக்கு கடந்த 2010 முதல் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில், ஆதார் எண் வழங்கும் யுஐடிஏஐ (UIDAI) நிறுவனம் நேரடியாக ஆதார் விவரங்களைப் பதிவு செய்து, ஆதார் அட்டைகளை அச்சிட்டு வழங்கியது. தமிழகத்தில், மக்கள்தொகை பதிவேடு அடிப்படையில்தான் ஆதார் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. இதனால் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், தமிழகம் முழுவதும் ஆதார் பதிவை மேற்கொண்டது.
தொடக்கத்தில், முன்பதிவு செய்த பிறகுதான் ஆதார் பதிவு மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும். விண்ணப்பங்களும் எளிதில் கிடைக்காது. ஆதார் பதிவு மேற்கொண்டாலும், அது அங்கீகரிக்கப்பட்டு ஆதார் அட்டையாக வருவதிலும் சிக்கல் இருந்தது. ஆபரேட்டர்களின் செயல்பாடுகளும் சற்று சுணக்கமாகவே இருந்தது.
இலவச ஆதார் பதிவை, சிலர் பணம் வாங்கிக்கொண்டு செய்தனர். பல இடங்களில் சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி, ஆதார் பதிவை நிறுத்திவிடுவர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். ஆங்காங்கே சாலை மறியலும் நடந்தன.
இந்நிலையில், ஆதார் பதிவு அங்கீகாரத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை பெற்றது. அதன் முகமையான அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பதிவு தொடங்கப்பட்டது. அது தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது, அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 578 மையங்களில் ஆதார் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கடந்த ஓராண்டில் 1,683 சிறப்பு ஆதார் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களை வரிசைப்படுத்தவும், அழைக்கவும், சர்ச்சைக்குரிய இடங்களில் டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் மையங்களைக் கண்காணிக்க 603 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம். அதை ஒரே இடத்தில் இருந்து கண்காணித்து வருகிறோம். இதனால், ஆபரேட்டர்களும் ஒழுங்காகப் பணியாற்றுகின்றனர்.
ஆதார் பதிவு விண்ணப்பங்களையும் நாங்களே அச்சிட்டு வழங்குகிறோம். கடந்த ஓராண்டில் 21 லட்சத்து 36 ஆயிரத்து 729 பேருக்கு ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 லட்சத்து 17 ஆயிரத்து 48 பேருக்கு ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், பொதுமக்களின் ஆதார் பதிவு எளிதாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago