ராகுல் காந்தி பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று 53-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி, முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்ற நம் முன் நெடும்பயணம் காத்திருக்கிறது. இருவரும் இணைந்தே நடைபோடுவோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சனாதன ராஷ்டிரத்தை அமைக்கும் நோக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைச் சிதைக்கும் சாதிய, மதவாத, சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை சூட வாழ்த்துகிறோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் துணை நிற்போம்.

மநீம தலைவர் கமலஹாசன்: எனது நண்பர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். துன்பங்களைப் புன்னகையுடன் எதிர்கொண்டு, வெறுப்புக்கு அன்புடன் பதிலளித்த நீங்கள், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்