சென்னை: தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிககளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நில சீர்திருத்த துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிவரித்துறை இணை ஆணையராகவும், பட்டு வளர்ச்சி துறை இயக்குநர் விஜய ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநர் ஆயிஷா மரியம், சிறுபான்மையில் நலத்துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாமூரி, பட்டு வளர்ச்சி துறை இயக்குனராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் விஜய குமார், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர் ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
» திருவாரூர் | ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
» வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago