திருவாரூர்: திருவாரூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
திருவாரூரில் நாளை (ஜூன்19) நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் வருகை தந்தார். சன்னதி தெரு இல்லத்தில் தங்கியுள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) காலை சன்னதி தெரு இல்லத்திலிருந்து காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டம் புறப்பட்டார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அதன் பின்னர் காட்டூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் டிஆர்பி ராஜா, எம் எல் ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் உடன் சென்றனர். அங்கு கலைஞர் கோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். கலைஞர் கோட்டத்தில் அமைந்துள்ள கலைஞரின் முழு உருவச் சிலையை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வீ யாதவ் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago