பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஓய்வூதியர்கள் நாளை போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நாளை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அகில இந்திய வங்கி ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு சார்பில், சென்னையில் நாளை (ஜூன் 20) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடந்த 2002 நவம்பர் மாதத்துக்கு முன்பு ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் முழுஅளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களைப் போல கருணைத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். இத்தொகையை கடந்த 2016 ஜன.1-ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்