சென்னை: ஏறத்தாழ 13 மணி நேரம் மேடையில் நின்று மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சோர்வடைந்த விஜய் மேஜையைப் பிடித்து நிற்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகர் விஜய், 1,500 மாணவ, மாணவிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். மேலும், அவர்களது பெற்றோர், குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய விழா, நள்ளிரவு 12.30 மணிக்கு முடிவடைந்தது. ஏறத்தாழ 13 மணி நேரம் மேடையில் நின்ற விஜய், கடைசிவரை உற்சாகத்துடன் மாணவ, மாணவிகளை வரவேற்று, சான்றிதழ், ஊக்கத்தொகையை வழங்கினார். அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
» 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
» காசநோயை 2025-க்குள் ஒழிப்போம்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்
மிகுந்த சோர்வடைந்திருந்த அவர், ஒரு கட்டத்தில் மேடையில் இருந்த மேஜையில் சாய்ந்து, ஓய்வாக நின்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவ, மாணவிகள், பெற்றோர், ரசிகர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காலை, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago