சென்னை: நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகிவிடும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓ.பன்னீர்செல்வம்: காங்கிரஸ் அரசு கடந்த 2011-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டபோதே, அதை எதிர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதே இதற்குக் காரணம். கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் இணைந்து நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை இந்தியா முழுவதும் நிலவுகிறது.
கிராமப்புறங்களில் தேவையான பயிற்சி மையங்கள் இல்லாததும், நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களில் பயிலும் அளவுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு பண வசதி இல்லாததுமே இதற்குக் காரணம்.
» கர்நாடக அரசிடம் இருந்து ஜூன் மாதத்திற்கான நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
» சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; பல மாவட்டங்களில் மழை நீடிப்பு
இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 50 மாணவர்களில் 37 பேர் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்ததும், பெரும்பாலான மாணவர்கள் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் பயின்றுள்ளதும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, பெரும்பாலானோர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலம் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, நகர்ப்புறங்களிலே பணிபுரியத்தான் விரும்புகின்றனர். ஆனால், கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்றால், கிராமப்புறங்களுக்கான மருத்துவச் சேவை பூர்த்தி செய்யப்படும். எனவே, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு, திமுக அரசு கொடுக்க வேண்டும்.
கி.வீரமணி: நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 37 பேர் நீட் பயிற்சி மையங்களில் பயின்றவர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் முன்னேறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். எனவே, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிட்டது. இந்த சமூக அநீதிக்கு எதிராக, அனைத்து சமூக நீதி சக்திகளும் ஒன்றிணைந்துப் போராட முன்வரவேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago