கடந்த ஆண்டை விட 25 சதவீத பேருந்துகள் குறைவு: தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி? - போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கவலை

By கி.ஜெயப்பிரகாஷ்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2 ஆண்டுகளாக புதிய விரைவு பேருந்துகள் வாங்கப்படவில்லை. புதிய தொழிலாளர்களும் நியமிக்கப்படவில்லை. மேலும் 25 சதவீத பேருந்துகளும் நீக்கப்பட்டுள்ளதால், தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி இடையே இயக்கப் படுகின்றன. பேருந்துகளின் பராமரிப்புப் பணிகள் முழுமையாக நடைபெறாததால் பல பேருந்துகள் பழுதடைந்து கிடக்கின்றன. உடைந்த மேற்கூரைகள், இருக்கைகள், ஜன்னலுடன் பல பேருந்துகள் இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக விரைவுப் பேருந்துகளை 2 ஆண்டுகள் அல்லது 8 லட்சம் கி.மீ. தூரம்தான் இயக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து 500 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பழமையான இந்த பேருந்துகளால் பொதுமக்கள் மட்டுமின்றி போக்கு வரத்துக்கழக ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக போக்கு வரத்து கழக அதிகாரிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, போக்கு வரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்தாலும் ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகளை வாங்குவதில்லை. இதனால், பழைய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. மிகவும் மோசமான நிலையில் இருந்த 25 சதவீத பேருந்துகளை நீக்கிவிட்டோம். அதற்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்கவில்லை. கடந்த தீபாவளியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 25 சதவீத பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. நிதி நெருக்கடியால் எதுவும் செய்ய முடியவில்லை என நிர்வாகம் கூறுகிறது. தற்போதுள்ள பழைய பேருந்துகளை முழுமையாக சீரமைத்து தீபாவளி கூட்டத்தை சமாளிக்க உள்ளோம். எங்களால் முடிந்த வரையில் பணியை சிறப்பாக செய்கிறோம் என்றனர்

தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘தமிழக போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 48 ஆயிரம் பேர் ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர். இந்த பிரிவில் மட்டும் சுமார் 2,500 பணியிடங்கள் காலியாகவுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. பராமரிப்புப் பணிகள் முழுமையாக நடக்காததால் பல பேருந்துகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால், மக்களுக்கு பேருந்து சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி யாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்