சென்னை: முதியோருக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன், வரும் 21-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டின் இறுதி அரையாண்டுக்கு ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்குரிய பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு டோக்கன் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 21-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 40 மையங்களை நேரில் அணுகலாம். ஜூலை 31-ம் தேதி வரை அலுவலக நாட்களில் நாள்தோறும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்படும்.
பயண டோக்கன்களை புதிதாக பெற விரும்புவோர் குடும்ப அட்டை நகலுடன், வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago