ஈரோடு: முதல்வர் தொடர்பாக அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியை சிவகிரி போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியைச் சேர்ந்தவர் கவுதம். இவர், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளார். சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துகளை பதிவிட்டும் வந்துள்ளார். சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து கவுதமிடம் சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எஸ்பி அலுவலகம் முன்பு ஏராளமான அதிமுக-வினர் குவிந்தனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘இது பழிவாங்கும் நடவடிக்கை’ என தெரிவித்த அதிமுகவினர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே கவுதம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீ்திபதி உத்தரவின் பேரில் கோபி மாவட்ட சிறையில் கவுதமை போலீஸார் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago