வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் தயார் நிலையில் 176 நிவாரண மையங்கள்

By ச.கார்த்திகேயன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 176 நிவாரண மையங்களை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக வட கிழக்கு பருவமழை, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. அதன் காரணமாகவே, மாநகராட்சி வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைப்பது, வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்துவது, மழைநீர் வடிகால்களை தூர்வாருவது, மழை காலத்தில் மீட்பு படகுகளை தயார்நிலையில் வைத்திருப்பது போன்ற பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில், 1,894 கி.மீ. நீளத்தில் 7,351 மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இவற்றில் தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 61 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் நிறைவடைய உள்ளன. விரிவாக்கப்பட்ட சென்னை பகுதியில் 376 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 30 கால்வாய்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள், தூர்வாரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதன் மூலம், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சி சார்பில் 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 6 சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு நீர் தேங்குவதை தடுக்க, அதிக திறன் கொண்ட 60 டீசல் பம்ப்செட்கள் தயார் நிலையில் உள்ளன. நீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, 109 இடங்களில் மீட்பு படகுகளை தயார் நிலையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க 176 நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி சரியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நீர் தேங்கும் இடங்களாக மொத்தம் 859 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு 458 மோட்டார் பம்ப்செட்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால், வாடகைக்கு எடுத்து இயக்கவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு வழங்கும் திறன் கொண்ட 4 பொது சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றை நிறுத்த 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்கள் மூலம், எத்தகைய பேரிடர் வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்