செந்தில்பாலாஜி விவகாரம் - தமிழகத்தில் அரசியல் பரபரப்பு | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 16, 2023

By செய்திப்பிரிவு

‘அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர முடியாது’ - ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கும் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரையின்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில்பாலாஜி, அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE