திருச்சி: திருச்சியில் மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுமானப் பொருட்களை வைக்கும் கிடங்காக தென்னூர் உழவர் சந்தை மைதானம் மாறி சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், வணிக நிகழ்வுகள் உள்ளிட்டவை நடைபெறும்.
மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், எளிதாக பொதுமக்கள் இந்த இடத்துக்கு வந்து செல்ல முடியும் என்பதாலும், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இருப்பதாலும் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சியினர் இந்த மைதானத்தையே தேர்வு செய்வது வழக்கம்.
தற்போது, இந்த மைதானத்தில் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பொருட்களை போட்டு வைத்திருப்பதால், அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், மைதானமும் சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் க.சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்) ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மாநகராட்சியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டு ராட்சத கன ரக இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்கி வைத்துள்ளது. கான்கிரீட் கலவைகளைக் கொண்டு புதை சாக்கடை தொட்டி தயாரித்தல் போன்ற பணியும் இங்கு நடைபெறுகிறது.
இதனால், இங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்துக்கு மாற்றாக புத்தூர் நான்கு ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி வழங்குகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், உழவர் சந்தை மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து வந்தது.
இப்போது அங்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே, உழவர் சந்தை மைதானத்தை ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து உடனே மீட்டு, சீரமைத்து வழக்கமான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் சிவபாதம் கூறியது: புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த இடத்தை கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்த நிறுவனத்துக்கு அனுமதிவழங்கியுள்ளோம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இன்னும் 3 மாதங்களில் புதை சாக்கடை பணிகள் முடிந்துவிடும். அதன்பிறகு, உழவர் சந்தை மைதானம் சீரமைக்கப்பட்டு பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago