சென்னை: கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. முறையான முயற்சியோடு பயிற்சியையும் மேற்கொள்வோருக்கு கையெழுத்து அழகாக அமைந்துவிடும்.
அத்தகைய விருப்பத்தை நிறைவுசெய்யும் வகையில் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையவழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்துநடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஜூன்.19-ம் தேதி (திங்கள்) முதல் ஜூன்.23 (வெள்ளி) வரை தொடர்ந்து 5 நாட்களும் தினமும் மாலை 5மணி முதல் 6மணி வரை நடைபெறும்.
மாணவர்களின் வரைதல், சதுரங்கம், நடனம் மற்றும் சிறப்புத் திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான பல பயிற்சிகளைப் பல்லாண்டுகளாக வழங்கிவரும் பெருந்துறையிலுள்ள கிட்ஸ் அகாடமி மற்றும் டாப்பர்ஸ் கிளாஸின் நிறுவனரும் புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான என்.சிந்துஜா புவனேஷ், இந்தக் கையெழுத்துப் பயிற்சியை வழங்க உள்ளார். இவர் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கையெழுத்து திறனை மேம்படுத்தி, அவர்கள் அதிக மதிப் பெண்களைப் பெற பயிற்சியளித்துள்ளார்.
இந்தப் பயிற்சியில் எழுதும்போது உட்கார்ந்திருக்கும் தோரணை, எழுதப் பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்றவற்றை வைத்திருக்கும் முறை, சிறிய எழுத்துகள், பெரிய எழுத்துகள், எண்கள், சொற்கள், வாக்கியம், பத்தி ஆகியன எழுதும் முறைகள் பற்றி பயிற்சி ஆளிக்கப்படும்.
» உயிர் காக்கும் பணியில் உயிரிழப்பு கூடாது
» கல்வி இன்று | கல்விக் கொள்கை குழப்பத்தால் இழப்பு யாருக்கு?
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/handwritingprogram என்ற லிங்கில், ரூ.599/- மட்டும் (வரிகள் உட்பட) கட்டணமாக செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடின் மூலமாகவும் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7418036466செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago