திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வைத்தார். இங்கு 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள், மரக்கரி துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வுப் பணியில், ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 அடியிலேயே தென்பட தொடங்கிய நிலையில், முழுமையாக தோண்டிய பின்னர் முதுமக்கள் தாழிகள் திறக்கப்படும், என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago