தமிழகத்தில் ஜூன் 18, 19-ல் கனமழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 16) ஓரிரு இடங்களிலும், நாளை சில இடங்களிலும், வரும் 18, 19-ம்தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 18-ம் தேதி திருவள்ளூர், இரானிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 19-ம் தேதி திருவள்ளூர், இரானிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும். சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE