சென்னை: “உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு அப்படியென்ன செந்தில்பாலாஜி மீது பாசம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழைய புகார். மன ரீதியாக, உடல் ரீதியாக பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருதய நோயை உருவாக்கியிருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த மே 16-ஆம் தேதியன்று செந்தில்பாலாஜி மீது புதிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கs சொன்னது உச்ச நீதிமன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்ச நீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அமலாக்கத் துறை தன் விசாரணையை தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்போது பொதுவெளியில் வந்துவிட்டதோ, அதுகுறித்து முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத் துறையின் கடமையாகும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
யாரை எதிர்க்கிறார் ஸ்டாலின்? உச்ச நீதிமன்றத்தையா? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் ஸ்டாலின்? உச்ச நீதிமன்றத்துக்கா? இருதய நோயை எப்படி ஒரே நாளில் உருவாக்க முடியும்? 10 ஆண்டுகளுக்க் முன்பு உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம் என்று தெரிந்தும், அநியாயமான தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் ஸ்டாலின் பேசியிருப்பது கண்டிக்கத்தது. உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு அப்படியென்ன செந்தில்பாலாஜி மீது பாசம்?'' என்று நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, “தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!” என்று கூறி ஒரு வீடியோ பதிவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன் விவரம்: திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago