மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது ஜி-20 மகளிர் மாநாடு: 158 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜி-20 மகளிர் மாநாடுஇன்று (ஜூன் 15) தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 158 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இன்று நடைபெறும் தொடக்கநிகழ்ச்சியில், மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிபங்கேற்கிறார். இதுகுறித்து மாநாட்டின் தலைவர் சந்தியா புரேச்சா, தலைமை ஒருங்கிணைப்பாளர் தாரித்ரி பட்நாயக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, மாற்றம், செழிப்பு மற்றும்முன்னேற்றம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், பெண் சாதனையாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி மற்றும் 8 அமர்வுகள் நடைபெற உள்ளன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 158 பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அடித்தட்டு மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரம்,பாலின சமத்துவம், பொருளாதார சுதந்திரம், செயற்கை நுண்ணறிவுஆகிய 5 அம்சங்களை மையப்படுத்தி விவாதங்கள் நடத்தப்படும். ஏற்கெனவே ஜெய்ப்பூர்,அவுரங்காபாத் ஆகிய இடங்களில்நடந்த மகளிர் பணிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்றனர்.

மாநாட்டையொட்டி மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE