சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இத்தேர்வில் நாடு முழுவதும் 11.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தேசிய அளவில் தமிழக மாணவர் பிரபஞ்சன் 720-க்கு 720மதிப்பெண்ணுடன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: நீட் தேர்வில் இந்தாண்டு தமிழ்நாடு மாணவர்களின் வெற்றி 53 சதவீதம் அதிகமாக உள்ளது. முதல் 10 பேரில் 4 பேர் நமது மாணவர்கள். நீட் தேர்வை ஆர்வத்துடன் ஏற்று சிறந்த திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் முதல்இடம், கவுசவ் பவுரி 3-ம் இடம்,சூரியா சித்தார்த் 6-வது இடம்,எஸ்.வருண் 9-வது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 4 பேருக்கும் வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தேசிய அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் உட்பட நீட் தேர்வில் வெற்றி பெற்றதமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். அதேநேரம், தமிழக மாணவர்கள் முதல் இடம் பிடித்துள்ளனர் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். நடப்பு ஆண்டில் நீட் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் கனவை மெய்ப்பட வைக்க நீட் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது. குறிப்பாக, ஏழை மாணவர்கள் நீட்தேர்வில் பெருமை தேடி தருகின்றனர். இந்த ஆண்டுடன் நீட் தேர்வு குறித்த விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வில்அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்றுதமிழக மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
சசிகலா: நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர் பிரபஞ்சனின் சாதனை ஈடு இணை இல்லாதது. அதேநேரம், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு என்ற கோரிக்கையும் எழுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago