நிலவேம்பு பாதுகாப்பானதே: கமலுக்கு மருத்துவர் சிவராமன் பதில்

By மு.அப்துல் முத்தலீஃப்

நிலவேம்பு சூரணம் பாதுகாப்பான ஒன்று, நிலவேம்பு, நிலவேம்புச் சூரணம் இரண்டிற்கும்  வித்தியாசம் உள்ளது. இணையதளத்தில் வரும் தகவல்களை உண்மை என நம்பி கமல்ஹாசன் கருத்துச் சொல்லி இருக்கிறார், நிலவேம்புச் சூரணம் மிகுந்த பயன் தரும் ஒன்று என சித்தமருத்துவ மூத்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த உண்மை நிலை என்ன என்பதை அறிய சித்த மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர் சிவராமனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பாக கேட்டபோது அவர் கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு குறித்து கூறிய கருத்து எந்த மாதிரி எதிர்வினையை ஏற்படுத்தும். அதுபற்றி உங்கள் கருத்து?

நடிகர் கமல்ஹாசன் அவசரப்பட்டு ஒரு தவறான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்த  ஆழமான புரிதல் இல்லாமல் சொல்லியிருப்பது போல் உள்ளது. இதற்குப் பின்னால் நவீன மருத்துவர்களும்,  பொது விஞ்ஞானிகள் சிலரும் அரைகுறையாக ஆய்வு செய்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

நிலவேம்பு சூரணத்தில் ஒன்பது தாவரங்கள் இருக்கின்றன. அச் சூரணத்தில் உள்ள பல்வேறு கூறுகளில் ஒரே ஒரு கூறை மட்டுமே விமர்சகர்களால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் அந்த ஒரு கூறில் இருக்கும் பல்வேறு ரசாயனப் பொருட்களிலும் ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தை மட்டுமே சுட்டிக் காட்டி சிலர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். எங்கேயோ நடந்த ஆய்வில் வெளிவந்த முடிவை, இணையதளத்தில் தரவிறக்கம் செய்து அது ஊடகங்களில் பரவ, அதை நவீன மருத்துவர்களும் குறையாகப் பேசியுள்ளனர். இதுபோன்று வெளியான சர்ச்சையை மட்டும் கவனத்தில் கொண்ட கமல்ஹாசன்  எதுவும் விசாரி க்காமல் ட்வீட் செய்துள்ளார்.

சாதாரண நபர் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் பிரபலம் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது, கமல்ஹாசனின் ட்விட்டர் கருத்து தவறான ஒன்று. அப்படி அவர் செய்திருக்கக் கூடாது. அவர் தன் ரசிகர்கள்  நிலவேம்பு கசாயம் விநியோகிக்கக்கூடாது  என்று கூறியுள்ளார். பொதுவெளியில் , சமூக தளத்தில் கருத்து சொல்லும்போது அதன் அத்தனை விஷயங்களையும் நுட்பமாக ஆராய்ந்து சொல்வதுதான் ஆரோக்கியமானது. அவசியமும் கூட.  அதை கமல்ஹாசன் செய்யவில்லை. தவறான விஷயம் இது. அது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தும்.

அப்படியானால் அவரது சந்தேகம் எத்தகையது?

நிலவேம்புக் குடிநீர் வேறு, நிலவேம்புத் தாவரத்தில் உள்ள ஒரு கூறு வேறு. நிலவேம்புக் கஷாயம் பாதுகாப்பற்றது என்று எங்கேயும் புகார் எழவில்லை. குடித்ததால் பக்கவிளைவு ஏற்பட்டது, வயிறு கெட்டுப் போனது என்று எந்தப் புகாரும் இதுவரை வந்ததில்லை.

2006ம் ஆண்டு முதல் பல வகைகளிலும் நில வேம்பு பாதுகாப்பானது. மிகப்பெரிய அளவில்   பயன்பாட்டில் இருந்து வருகிறது. சித்த மருத்துவத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நிலவேம்பைப் பயன் படுத்தி வருகிறோம்.

அப்படி இருக்கும் போது அதன் மீது சர்ச்சையைக் கிளப்புவது, பொது மக்களுக்கு பயத்தையே உருவாக்கும். கமல், விசாரித்துவிட்டு பின்னர் பதிவிட்டிருக்கலாம்.

இவ்வாறு  சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்