திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தீக்குளிப்பு முயற்சி

By இரா.கார்த்திகேயன்

விவசாயத்துக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி. இவர் தனது விவசாயத்துக்காக வண்டல் மண் எடுக்க பல முறை அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அவர் விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைக்காததால், கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட அவரைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, ''ஓடைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயி பழனிச்சாமி கோரியதால், யாரும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை'' என்று பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து விவசாயி பழனிச்சாமியைப் போலீஸார் அப்புறப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்