கரூர் | அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலக கட்டிடத்திற்கு அமலாக்கத் துறை சீல்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகமாக பயன்படுத்திய கட்டிடத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அக்கட்டிடம் பூட்டிக் கிடந்தது.

இந்நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடத்தில் அமலாக்கத்துறை துணை இயக்குநர் தலைமையில் நேற்றிரவு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை அமலாக்கத்துறை இயக்குநனரகம் அனுமதியின்றி திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள அமலாக்கத் துறை இயக்குனரக துணை இயக்குநர் முன் ஆஜராகவேண்டும் அல்லது தொடர்பு கொள்ளவேண்டும் என அதில் அலுவலக தரைத்தள தொலைபேசி எண்களோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்