விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன் : மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட அறிக்கை:

குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவதற்கு முன்பாக மாநில அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டது. முதல்வரே நேரில் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளைவிரைவாக முடித்திட வேண்டுமென உத்தரவிட்டார். மேட்டூர்அணையில் 103 அடி தண்ணீர்இருப்பு உள்ள நிலையில், திட்டமிட்டவாறு ஜூன் 12 அன்றே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ஏக்கருக்கு ரூ. 75.96 கோடியில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் முதல்வர் அறி வித்தது வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் சாகுபடி செலவுக்கு தேவையான பயிர் கடன் வழங்க கேட்டுக் கொள்கிறோம். இயற்கை இடர்பாடுகளிலிருந்த விவசாயிகளை பாது காத்திட குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE