கோவை: கோவையில், தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர், சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகம், ரேஸ்கோர்ஸில் மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த அலுவலகத்தில் ஊழியர் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், அலுவலகத்தின் கதவை உள்பக்கமாக பூட்ட முயன்றார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர், அந்த இளைஞரைப் பிடித்து அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளினார். அலுவலகம் முன்பு சாலையில் விழுந்த அந்த இளைஞர், பின்னர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த இளைஞர், அவிநாசி சாலையில் பி.ஆர்.எஸ் எதிரேயுள்ள மியூசியம் அருகே சாலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், அந்நபரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
தற்கொலை முயற்சி: முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர், சாலையில் வந்த வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் எனத் தெரியவந்தது. அவர் எதற்காக எம்எல்ஏ அலுவலகத்துக்குள் நுழைந்தார், திருட நுழைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஒருபுறம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழப்பு குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர், நேற்று முன்தினம் இரவு சாலையில் வந்த அரசுப் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் தற்கொலை பிரிவில் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறும்போது, ‘‘எனது அலுவலகத்துக்கு வந்த மர்ம நபர் யார், எதற்காக வந்தார் எனத் தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்துக்குள் மர்ம நபர் நுழைந்த சம்பவம் தொடர்பாக உதவியாளர் தெரிவித்தார். நான் போலீஸாரிடம் புகார் அளிக்கக் கூறினேன். போலீஸார் விசாரித்து வருகின்றனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago