இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பயணிகள் காத்திருப்பு அறை

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பயணிகள் காத்திருப்பு அறை `இந்து தமிழ் திசை` செய்தி எதிரொலியாக மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாகர்கோவிலில் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர்பயணிகள் வந்து செல்லும் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏ.சி. வசதியுடன் 2 பிரிவாக 93 இருக்கைகளுடன் பயணிகள் காத்திருப்பு அறை உள்ளது. இதன் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் தொலைவில் உள்ள இடங்களில் இருந்து வரும் பயணிகள் இளைப்பாறவும், ஓய்வு எடுக்கவும் வசதியாக இருந்தது.

இந்த அறையை முறையாக பராமரிக்காத தால் அதில் பொருத்தப்பட்டிருந்த குளிர் சாதனப் பெட்டிகள் பழுதாகின. சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதால் வெயில் நேரத்தில் இந்த அறையில் பயணிகள் அமராத நிலையில், குடிமகன் களும், காதலர்களும் அதை தங்களின் புகலிடமாக மாற்றினர். இதனால் காத்தி ருப்பு அறைக்குள் அமர முடியாமல் பயணிகள் வெளியே அமர்ந்திருந்தனர்.

இதை சுட்டிக்காட்டி கடந்த 10-ம் தேதி இந்து தமிழ் திசைநாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக பயணிகள் காத்திருப்பு அறையை சீரமைத்து பயன் பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக பயணிகள் காத்திருப்பு அறையை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பயணிகள் அமரும் வகையில் காத்திருப்பு அறையை திறந்து சுத்தம் செய்து பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது வடசேரி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்து பேருந்துகள் வரும் வரை ஓய்வெடுக்கின்றனர். இதுபோல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்து வரும் வரை அங்கு அமர்ந்து செல்கின்றனர்.

அதே நேரம் காத்திருப்பு அறையில் உள்ள ஏ.சி.க்களை சரிசெய்ய ஆய்வு செய்யப்பட்ட நிலையில், சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. சீரமைப்பு பணியை உடனடியாக மேற்கொண்டால் வெயில் கொடுமைக்கு ஆளாகாமல் பயணிகள் ஓய்வெடுக்க வசதி கிடைக்கும். எனவே தாமதமின்றி ஏ.சி.க்களை சரிசெய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்