மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 4,000-க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் தாராளமான பார்க்கிங் வசதியுடன் மாநாட்டு மைய மண்டபம் கட்டியும், திருமணம், கண்காட்சிகள் நடத்துவதற்கு தனியார் மத்தியில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. அதனால், கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.47.72 கோடி முடக்கி கட்டிய இந்த கட்டிடத்தில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடியில் மாநாட்டு மைய மண்டபம் (convention centre) கட்டப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 9.68 ஏக்கர் மைதானத்தில் 46,300 சதுர அடியில் கீழ் தளம் மற்றும் தரைத்தளம் கொண்டதுமாக கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில், தனியார் கண்காட்சி அரங்குகள், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். அதிமுக ஆட்சியில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு, திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 செப்.8ம் தேதி நேரடியாக மதுரைக்கு வந்து திறந்தார்.
நிதிநெருக்கடியில் இருக்கும் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் தரக்கூடிய வகையில் இந்த 'மதுரை மாநாட்டு மையம்' கட்டப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டு மைய மண்டபம் திறந்து ஒரு ஆண்டு நெருங்கும்நிலையில் இதுவரை இந்த மாநாட்டு மையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படவில்லை. புத்தகக் கண்காட்சி உள்பட 4 அரசு நிகழ்ச்சிகள், தனியார் கண்காட்சிகள் உள்பட மொத்தமே 10 நிகழ்ச்சிகளே இந்த மாநாட்டு மையத்தில் நடந்ததுள்ளது. அதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.47.72 கோடி நிதியை வணிக நோக்கத்தில் இந்த திட்டத்திற்காக முடங்கிய நிலையில் இந்த மாநாட்டு மையத்தால் மாநகராட்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
» அதிமுக Vs பாஜக | பிடிக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்: சி.வி.சண்முகம் காட்டம்
இந்த மாநாட்டு மையம் கட்டுவதற்கு முன் இருந்த தமுக்கம் மைதானத்தில் மு.க.அழகிரி மகன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தது. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமுக்கம் மைதானம் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. அதன் மூலம் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைத்தது. ஆனால், தற்போது தாராளமான 4,000 இருக்கைகள் போடும் அளவிற்கு தாரளமான பார்க்கிங் வசதியுடன் மாநாட்டு மைய மண்டபம் கட்டியும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், இந்த மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''கடந்த தமுக்கம் மைதானத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்த ரூ.1 லட்சம் வரையிலே வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கட்டிய மாநாட்டு மையத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஏசி பயன்படுத்துவதற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர் டீசல் பணம், தூய்மைப்பணி உள்ளிட்ட சில வசதிகளுக்காக கூடுதலாக ரூ.2.50 லட்சம் வரை செலவாகிறது. மேலும், அனைத்து ஏசிகளையும் ஒரே நேரத்தில் இயக்கக்கூடிய அளவிற்கு ஜெனரேட்டர் வசதி இல்லை. கூடுதலாக ஒரு ஜெனரேட்டரை வெளியே வாடகைக்கு எடுத்து கொண்டு வர வேண்டிய உள்ளது.
சமையல் அறையில் புகைப்போக்கி வசதி இல்லை. அந்த வசதி இல்லாமல் அங்கு உணவு சமைக்க முடியாது. நிகழ்ச்சிக்கு வருவோர் சாப்பிடுவதற்கான விசாலமான ஹால் வசதி இருந்தும், அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கான மின்விசிறி வசதி இல்லை. மேலும், இந்த ஹாலின் மேற்கூரையில் ஷீட் போடப்பட்டுள்ளது. இந்த ஷீட்டின் வெப்பத்தால் உள்ளே சில நிமிடங்கள் கூட நிற்க முடியாது. வாடகை அதிகமாக இருப்பதாகவும், மொத்த அளவு 46,300 சது அடி தேவை இல்லாவிட்டால் அதனை 400 இருக்கைகள், 250 இருக்கைகள் என்று தனித்தனியாக 6 அரங்குகளாக பிரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அப்படியிருந்தும் தனியாருக்கு இங்கு நிகழ்ச்சிகள் நடத்த ஆர்வமில்லை.
புகைபோக்கி இல்லாத சமையல் அறை, டைனிங் ஹால் போன்ற வசதிகள், கட்டி ஒரு ஆண்டாகியும் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. அதனால், விருந்துகளுடன் கூடிய திருமண, சுப நிகழ்ச்சிகள் நடத்த வருவோர், இந்த மாநாட்டு மையத்தை தினமும் பார்வையிட்டு வந்து புக்கிங் செய்யாமல் திரும்பிச் செல்கிறார்கள். மாநகராட்சியும், இந்த வசதிகளை செய்து கொடுத்து மற்ற மண்டபங்களை போல் சுப நிகழ்ச்சிகளுக்கு மாநாட்டு மண்டபத்தை வாடகைக்கு விடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனாலே, மாநாட்டு மைய மண்டம், மற்ற தனியார் மண்டபங்களை போல் வாடகைக்கு செல்லாமல் உள்ளது.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சில வசதி குறைபாடுகள் உள்ளது. அவை முழுமையடைந்தபிறகு அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago