தமிழக மாநில தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அண்மையில்தான் சிபி - சிஐடி டிஜிபி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தமிழகத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும்வரை இருப்பார். இதில் எது குறைவான காலமோ அது அவரது ஓய்வுக்கான காலமாகக் கருதப்படும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ம்ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக இந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், தமிழக மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தரை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.

மேலும், மாநில தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஏடிஜிபி தாமரைக் கண்ணன், வழக்கறிஞர் பிரியகுமார் டாக்டர் திருமலைமுத்து, மற்றும் பேராசிரியர் டாக்டர் எம்.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்