சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டி டியூட் வளாகத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வராததால், இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ``இந்த மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.146 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவமனையைத் திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்கப்பட்டது. அவரும் வருவதாகத் தெரிவித்தார்.
» மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆனால், இப்போது எந்த பதிலும் இல்லை. தயார் நிலையில் உள்ள மருத்துவமனையை நீண்டநாட்களாகத் திறக்காமல் இருப்பது சரியாக இருக்காது. அதனால், வரும் 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையைத் திறந்து வைக்க இருக்கிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago