சிவகங்கை அரசு மருத்துவமனையில் நரம்பியல், சிறுநீரகவியல் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என புகார்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவைசிகிச்சை, சிறுநீரகவியல் மருத்துவர்களை நியமனம் செய்யாமல் சுகாதாரத்துறை பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2021-22-ம் ஆண்டில் மட்டும் உள்நோயாளி, புறநோயாளிகளாக 6.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்றனர். ஆனால் இங்கு மருத்து வர்கள் நியமனத்தில், சுகாதாரத் துறை பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கூடுதலாக நரம்பியல், இருதயம், சிறுநீரகம் போன்ற துறைகள் தொடங்கப்படாததால் 221 மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டன. அதிலும் 30-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில், தலைக்காயங்களுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

தினமும் 20-க்கும் மேற்பட்டோ ருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிறுநீரகவியல் (நெப்ராலஜி) மருத்துவர் இல்லை. இதனால் சிறுநீரக சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறு வதில் சிரமம் உள்ளது. சமீபகாலமாக இதய நோய் தொடர்பான நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். ஆனால் இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள் இல்லை. இதனால் அவர்களும் மதுரைக்கே பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

ஆனால் 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 264 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இதயம், நரம்பியல், சிறுநீரகவியல் துறைகள் செயல்படுகின்றன. அங்கு கடந்த 2021-22-ம் ஆண்டில் 5.40 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சைக்கு வந்துள் ளனர். எனவே, பாரபட்சமின்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரியிலும் தேவையான துறைகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் ப.மருது கூறியதாவது: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை கல்லூரிக்கு அனைத்து வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் ஒரு லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். பாரபட்சமின்றி சுகாதாரத்துறை செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, இதில் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்