ஓசூர்: ஓசூரில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அண்ணாமலை, "விமானப் போக்குவரத்து என எண்ணற்ற திட்டங்கள் வர காரணமாக இருந்தார் மோடி. இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றினோம் என திமுக கூறுவது வேடிக்கையானது. எந்த அடிப்படையில் காங்கிரசும், திமுகவும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓட்டு கேட்க செல்கிறீர்கள். தொடர் மின்வெட்டு தமிழகத்தில் நிலவுகிறது. அமித்ஷா வந்தபோதே மின்தடை ஏற்பட்டது.
எதற்காக எங்களை பார்த்து பயப்படுகிறீர்கள். முதல் முறையாக பா.ஜனதாவை பார்த்து திமுக பயப்பட தொடங்கி உள்ளனர். நமது தொண்டர்களை பொய் வழக்கில் கைது செய்கிறார்கள். தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை மக்கள் தருவார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை முழுமையாக நீக்கி, சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு பெற்று தந்தது நமது பாஜக அரசு. விழுப்புரத்தில், விஷசாராயத்தில் 22 பேர் இறந்துள்ளனர். அது சாவு இல்லை கொலை. டாஸ்மாக் கடைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
பாஜக மக்களுக்கான அரசு. நாம் நமது 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளையும், 2 ஆண்டு கால திமுக அரசின் வேதனைகளையும் மக்களிடம்கூற வேண்டும். அமித்ஷா சென்னை வந்து சென்றது முதல் திமுகவினருக்கு ஜூரம் வந்து விட்டது. பா.ஜனதாவில் தான் தொண்டர் கூட உயர்ந்த பொறுப்புக்கு செல்ல முடியும் என அமித்ஷா கூறியுள்ளார்.
» மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
» சேலத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய 9-வது நபரும் உயிரிழப்பு
அவர் கூறியது முதல் திமுகவினர் என்னென்னவோ பேசி வருகிறார்கள். திமுகவில் உயர்ந்த பொறுப்புக்கு யாரும் போக முடியாது. உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜனவரியில் சென்னைக்கு வந்தனர். அவர்கள் 4 நாட்கள் இருந்து 10 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு சென்றனர்.
ஆனால் முதலமைச்சரோ ஒரு வாரம் வெளிநாடுகளுக்கு சென்று 3 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்ததாக கூறுகிறார்கள். மது பாட்டில்களின் மீது 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து ரூ.350 கோடியில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு கட்டி உள்ளார். இதை சோதனை செய்ய சென்ற போது தான் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கி உள்ளனர்.
டாஸ்மாக்கை வைத்து கொள்ளை அடித்தவர்கள் திமுகவினர். எங்கும், எதிலும் ஊழல் செய்து வருகிறார்கள் திமுகவினர். இந்தியை வேண்டாம் என சொன்னவர் மோடி. முதலில் உங்கள் தாய்மொழியை படியுங்கள். பின்னர் ஆங்கிலமும், அதன் பிறகு உங்களுக்கு பிடித்த மொழியை படியுங்கள் என மோடி கூறினார். புதிய கல்வி கொள்கையில் உங்கள் குழந்தைகளை உங்கள் தாய்மொழியில் படிக்கலாம் என கூறினார். இதே பகுதியில் உள்ள மக்கள் தெலுங்கு, கன்னடம் படிக்க வழிவகை செய்தார். இதை திமுகவினர் எதிர்க்கிறார்கள்.
எனது தாய்மொழியில் நீ படிக்க விடுவாயா என உங்களிடம் ஓட்டு கேட்டு வருபவர்களிடம் கேளுங்கள். தமிழகத்தில் இன்று அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை. அதை பாஜக கட்டாயம் செய்யும். அதற்கான அடித்தளமாக தான் இந்த கூட்டம் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, வெற்றியை மோடிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.நரேந்திரன், பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன், தொழில் துறை பிரிவு மாநில செயலாளர் ராமலிங்கம், அமைப்பு சாரா பிரிவு மாநில துணை செயலாளர் சீனிவாசன், இளைஞர் அணி மாநில செயலாளர் எம்.என்.கிஷோர், ஊடக பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் மல்லேஷ்ரெட்டி, இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் வீரேந்திரா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago