மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பொறுப்பேற்பு - அலுவல் சார் தக்கராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவு

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையராக எஸ்.கிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். மேலும் தக்கராக இருந்த கருமுத்து தி.கண்ணன் உடல் நலக்குறைவாக காலமானதால், அலுவர் சார் தக்கராகவும் எஸ்.கிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் தகுதியிலிருந்து துணை ஆணையர் தகுதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் துணை ஆணையராக ஆ.அருணாசலம் பொறுப்பேற்றார். அதன்பின்னர் துணை ஆணையர் நிலையிலிருந்து இணை ஆணையர் நிலைக்கு தகுதி மாற்றப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நேற்று இணை ஆணையராக எஸ்.கிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையராக இருந்து பதவி உயர்வில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், தக்காராக இருந்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் மே 23ம் தேதி காலமானார். இதனால் எவ்வித தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமலும், வங்கிக்கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்ய இயலாமலும், கருவூல நகைகள் அவசியத்திற்கு எடுக்க முடியாமல் இருந்தது. கோயில் நிர்வாக நலன் கருதியும், அன்றாட பணிகள் எவ்வித இடையூறின்றி நடைபெறும் வகையில் புதிய அறங்காவலர் குழு நியமனம் செய்யும் வரை அலுவலர்சார் தக்காராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அலுவல் சார் தக்காராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்