சென்னை: மத்திய உள்துறை அமித் ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டது தொடர்பாக தமிழக மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அப்போது, தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்களைப் பார்ப்பதற்காக விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினார். அப்போது மின்தடை ஏற்பட்டது.
எனினும், வாகனத்தில் இருந்து இறங்கிய அமித் ஷா, சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.
அவர் சென்றவுடன், பாஜகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
» ஐக்கிய அரபு அமீரகம் 2022-23-ல் ரூ.27,500 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் 4-வது இடம்
» பிரச்சினை வரும்போது நாட்டை நம்பலாம் - ஜெய்சங்கர் பெருமிதம்
பின்னர், கரு.நாகராஜன் கேட்டுக் கொண்டதையடுத்து, பாஜகவினர் போராட்டத்தைக் கைவிட்டனர். மின் தடை சம்பவத்துக்கு பாஜக நிர்வாகிகள் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “மின்சாரம் தடைபட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. மின் வாரியம் மீது நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது” என்றார்.
தொடர்ந்து, போரூர் துணை மின்நிலையத்தில் தமிழக மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உயர் அழுத்த மின் பாதையில் 9.34 மணியளவில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், பரங்கிமலை, விருகம்பாக்கம், போரூர், பூந்தமல்லி, கோவூர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 10.12 மணி வரை மின்தடை நீடித்தது. எனினும், மாற்றுப் பாதை வழியாக மின்சாரம் விநியோகித்தோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago