பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுமா?: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 11 மாதங்கள் (மே தவிர்த்து)ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பணிநிரந்தரம், விடுமுறை காலமான மே மாதத்திலும் ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த மாதம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதற்கு உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஊதியம் வழங்கப்படாததால் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேமாத ஊதியம் வழங்கப்படும் எனஅரசின் சார்பில் எந்தவித உறுதியும் அளிக்கப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றே தெரிவிக்கப் பட்டது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE