மதிமுகவை வழிநடத்தும் ஆற்றல் வைகோவுக்கு இல்லை: முன்னாள் அவைத் தலைவர் விமர்சனம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: மதிமுகவை வழிநடத்தும் திறமை, ஆற்றல் இனி வைகோவுக்கு இல்லை என்று, மதிமுக முன்னாள் அவைத் தலைவர் சு.துரைசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "நான் என்னுடைய நிலைப் பாட்டை தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தொழிற்சங்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சங்கம் எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்பது, அந்தந்த சங்கத்தின் முடிவே தவிர, சங்கத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

வேண்டுமென்றே ஏதோ பிரச்சினை இருப்பதுபோல தேவையின்றி குழப்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் எனக் கூறுகிறார். அப்போது எதற்கு தனிக் கட்சி, திமுக-வுடன் மதிமுக-வை இணைக்கலாமே. தற்போதைய நிலையில் வைகோவுக்கு இனி மதிமுகவை நடத்தும் திறமை, ஆற்றல் இல்லை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 6 சீட்டுகளை பெற்றது.

சாத்தூரில் துரைவைகோ நின்றால் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மல்லை சத்யா என்னிடம் தெரிவித்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். வாங்கிய 6 தொகுதிகளில் அவரது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் எதிர்ப்பேன் என்றேன். இதற்கு அஞ்சி தான் துரை வைகோவை நிறுத்தவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்