தென்மேற்குப் பருவமழை ஓய்ந்து தற்போது கவனம் வடகிழக்குப் பருவமழை பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்திற்கு மழை தருவிக்கும் வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபர் இறுதியில் தொடங்க்க வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, கடலோர ஆந்திரம், ராயலசீமா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தெற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை முடியும் தறுவாயில் இதுதான் அதன் கடைசி தட்பவெப்ப அமைப்பாகும்.
இது வட ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் போது வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
“வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் 22 அல்லது 23 வாக்கில் உருவாகும், இது பருவமழை உருவாவதற்கான சூழ்நிலைமைகளை ஏற்படுத்தும். பருவமழை 2 நாட்கள் தாமதமாகலாம். ஒட்டுமொத்தப் பகுதியிலும் இயல்பான மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்”, சென்னை வானிலை ஆய்வு மைய உதவி தலைமை இயக்குநர் எஸ்.பி.தம்ப்பி தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசனில் 44 செமீ மழை பெய்யும். தெற்காசிய தட்பவெப்ப அமைப்பு தமிழகத்தில் இயல்புநிலைக்கு நெருக்கமான மழை அளவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பருவமழைத் தொடங்கும் தேதிகளில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் தேதிகள் முக்கியமல்ல பருவமழைச் செயல்பாடு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதுதான் முக்கியம் என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago