மதுரை: பள்ளிகளில் அடிப்படை சட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.தாரணி பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவில் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், வேல்முருகன் உள்ளிட்டோரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் வீராகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார், சிறப்பு அரசு வழக்கறிஞர் அன்புநிதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்துவாறு காணொலி காட்சி வழியாக பிரிவு உபச்சார விழாவில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் நீதிபதி தாரணி பேசியதாவது: இந்திய தண்டனை சட்டம், சாட்சிய சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், சாலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அடிப்படை சட்டங்கள் பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்களாக கொண்டுவர வேண்டும். சட்ட நடைமுறைகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நீதித்துறையில் 32 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து திருப்தியாக பணி ஓய்வு பெறுகிறேன். இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago