தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன 2,200 குழந்தைகளை மீட்க நடவடிக்கை: டிஜிபி தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 2,200 குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தை நேற்று தமிழ்நாடுடிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் மனுக்கள் மகளிரிடமிருந்து இருந்து பெறப்பட்டுள்ளன. அம்மனுக்கள் மீது விசாரணை செய்து, சில மனுக்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, மகளிருக்கு நியாயம்வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு உள்ளபிரச்சினைகளை அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமாக அணுக ஏதுவாக 120அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு சமீபத்தில், பெங்களூருமனநிலை மருத்துவ நிபுணர்கள்மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில், 18 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றங்கள் சில கருத்துகளை தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையில் 1,624 காவல் நிலைய அதிகாரிகள்,222 அனைத்து மகளிர் காவல் நிலையஅதிகாரிகள், உடனடியாக தனி கவனம்செலுத்தி, காணாமல் போன குழந்தைகளை 5 நாட்களுக்குள் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆவடி காவல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர்கள் பெருமாள், உமையாள், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, உதவி ஆணையர் சதாசிவம், ஆய்வாளர் பிரித்திவிராஜ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்