சென்னை: இந்திய - தென்னாப்பிரிக்க மேம்பாட்டுக் குழு அலுவலகம் போரூர்ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தென்னாப்பிரிக்க மேம்பாட்டுக் குழு அலுவலகம் போரூர் ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைக்கழக விளையாட்டு கல்வி மையத்தில் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் இந்தியாவுக்கான ஜமைக்கா நாட்டின் தூதர் ஜேசன் கீட்ஸ் ஹால், லெசதோ தூதர் தாபங் லினஸ் கொழும்போ, இந்திய பொருளாதார வர்த்தகக் குழு தலைவர் அசீப் இக்பால், எம்இஓ தமிழ்நாடு கிளை தலைவர் வெங்கடாச்சலம் முருகன், ஸ்ரீ ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம், துணைவேந்தர் உமாசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மையத்தின் தலைவராக விளையாட்டு கல்வி மைய இயக்குநரான டாக்டர் எஸ்.ஆறுமுகம் செயல்படுவார்.
திறப்பு விழாவை தொடர்ந்து, ``இந்திய விளையாட்டு சாதுர்யம் மற்றும் விளையாட்டு மேம்பாடு'' என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் ஜேசன் கீட்ஸ் ஹால், தாபங் லினஸ் கொழும்போ ஆகியோர் பேசும்போது, ``வர்த்தகத்தில் மட்டுமின்றி விளையாட்டு மற்றும் கல்வியிலும் இந்தியாவும், ஜமைக்காவும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன'' என்றனர்.
டாக்டர் ஆறுமுகம் பேசும்போது, ``இந்திய விளையாட்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு இரு நாட்டுமக்களையும் இணக்கமாக்கு கிறது'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago