ஜெயக்குமாரின் அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி உறவினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: நில அபகரிப்பு விவகாரத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்துள்ள மனுவைஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தி்ல் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும், நவீன்குமாரின் சகோதரர் மகேஷூக்குமிடையே பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்தநிலத்தை ஜெயக்குமார் தனது மருமகனுக்குசாதகமாக அடியாட்கள் மூலமாகமிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமார் மீது மகேஷ் போலீஸில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரியும், தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை தெரிவி்க்க தடை கோரியும் மகேஷூக்கு எதிராக ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி மகேஷ் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ்அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என ஏற்கெனவே இடைக்கால தடை விதி்த்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வழக்கை நிராகரிக்கக்கோரி மகேஷ் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்