கோவில்பட்டி: கோவில்பட்டி புதுக்கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஸ்வரன் (33). இவரது மனைவி சிந்து (22). இவர்களுக்கு கடந்த மார்ச் 29-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கனிஷ்காஸ்ரீ என பெயர் சூட்டினர். குழந்தை கனிஷ்காஸ்ரீக்கு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 31-ம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதற்கு பின்னர் நடந்தவை என, குழந்தையின் தந்தை மகேஸ்வரன் கூறியதாவது: ‘தடுப்பூசி செலுத்திய பின் காய்ச்சல் வந்தால் 2 மணி நேரத்துக்கு பின்னர் மாத்திரை கொடுங்கள்’ என, ஒரு டியூப் மாத்திரை, ஒரு சிறிய மாத்திரை ஆகியவற்றை ஓ.பி. சீட்டுக்கு பின்புறம் எழுதி தந்தனர். அதனை நாங்கள் அரசு மருத்துவமனை மருந்தகத்தில் தான் வாங்கினோம். கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தால் தெரியும்.
அன்று மாலை 3 மணிக்கு மேல் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மாத்திரை கொடுத்தோம். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையின் கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. பதறிப்போய் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு குழந்தையை அழைத்துச் சென்றோம். அங்கு பரிசோதித்தவர்கள், ‘இன்று மழை பெய்துள்ளதால், குளிர் காரணமாக குழந்தைக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது’ எனக் கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
ஆனால், மறுநாள் ஜூன் 1-ம் தேதி காலையும் குழந்தைக்கு நடுக்கம் இருந்ததால், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தோம். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ‘பெரிய பிரச்சினை இல்லை. ஏற்கெனவே கொடுத்த மருந்துகளையே கொடுங்கள்’ என்றார். அதன்பின் 2-ம் தேதி வந்த மருத்துவர், ‘பாராசிடாமல் சிரப்’ மட்டும் கொடுங்கள் என்றார்.
» தமிழகத்தில் ரூ.125 கோடியில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆனால், நடுக்கம் குறையாததால், 4-ம் தேதி குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குழந்தைக்கு வாய் முழுவதும் புண்ணாகி விட்டதால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். எனது மகளுக்கு உடல் நிலை சீராக வேண்டும். வேறு எந்த குழந்தைக்கும் இதுபோன்று நடக்க கூடாது என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு: இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “குழந்தை மார்ச் 29-ம் தேதி பிறந்தது. மே 31-ம் தேதி அவர்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது அவர்களுக்கு பாராசிடாமல் சிரப் மட்டுமே பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதனை வாங்கவே இல்லை.
ஏற்கெனவே ஏப்.7-ம் தேதி குழந்தை கனிஷ்காஸ்ரீயும், அவரது தாய் சிந்து ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்ததில் குழந்தை நலம் (Well Baby) என குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் தாய்க்கு தான் Amoxycillin, Paracetamol, Chlorpeniramine ஆகிய 3 மாத்திரைகள் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தான் தற்போது கொடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர்” என்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பரமேஸ்வரி கூறும்போது, “எங்கள் மகள் சுபா லட்சுமியை காய்ச்சல் காரணமாக கடந்த 2021-ல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குளுகோஸ் ஏற்றுவதற்காக ஊசி செலுத்திய போது, அது தவறாக இருந்துள்ளது. எனது மகளின் வலது கை வீங்கிவிட்டதால், எங்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றோம். அவர்களும் முடியாது என்றதால் மதுரைக்கு சென்றோம். அங்கு 3 மாதங்கள் இருந்து சிகிச்சை பெற்று, மகளை காப்பாற்றினோம். ஆனால் அவரது வலது கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago