இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவை எதிர்த்த வழக்கு: ஆணையரை அணுக ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தொண்டை மண்டல ஸ்ரீ ஞானபிரகாச தேசிக சுவாமிகள் மடத்தை நிர்வகிக்க ஆலோசனை குழுவை நியமித்து 1979-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் அறநிலையத் துறை ஆணையரை அணுக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைவ சமய நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட தொண்டை மண்டல ஆதீன மடமான, ஸ்ரீ ஞானபிரகாச தேசிக சுவாமிகள் மடத்தின் சீடர்களாக தொண்டமண்டல வேளாள சமுதாயத்தினர் உள்ளனர்.மடத்தை நிர்வகிப்பதற்காக, கடந்த 1975ம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் முழு நேர செயல் அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மடத்தின் நிர்வாகத்துக்காக, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்து, 1975-ல் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்து, 1979-ல் அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சைவ வேளாளர் பேரவை நிறுவனத் தலைவர் பகவதிமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "ஆதீன மடாதிபதியைவிட ஆலோசனைக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவு, அறநிலைய துறை சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரர்களின் அடிப்படை உரிமை குறித்து கேள்வி எழுப்பிய தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பாதிக்கப்பட்டவர்கள் அறநிலையத் துறை ஆணையரை அணுகலாம் என தெரிவித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை மாற்றியமைக்க கோரி, ஆணையரை அணுக சட்டம் வகை செய்யும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. எனவே, ஆணையரை அணுக கூறி, மனுதாரர்கள் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்