சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2015-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago