ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு கடற்கரையிலிருந்து நேற்று அதிகாலை கிறிஸ்து என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கிறிஸ்துவுடன், லிட்சன், பூரிஸ்டன், டின்னல்ஸ்டன், குழந்தை என 5 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகில் ஓட்டை ஏற்பட்டு மூழ்கத் தொடங்கியது. படகிலிருந்த 5 மீனவர்களும் கடலில் குதித்து ஐஸ் பெட்டி மற்றும் டீசல் கேன்களை பிடித்த வண்ணம் வெகுநேரமாக தத்தளித்துகொண்டிருந்தனர். அப்பகுதியில் மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு பாம்பன் மீன்பிடி இறங்குதளத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். இந்த விபத்தில் நாட்டுப் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கிவிட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago