அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
தரவரிசைப் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களும் சென்னை அரசு சட்டக் கல்லூரியையே தேர்வுசெய்தனர்.
1,052 இடங்கள்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) இவற்றில் சேர 11 ஆயிரத்து 637 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 10 ஆயிரத்து 642 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தகுதியின்மை காரணமாக, எஞ்சிய 995 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கட் ஆப் மதிப்பெண் செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. கட் ஆப் மதிப் பெண் 94.75 பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்த மாணவி எல்.ஸ்வேதா, 2-ம் இடம் பெற்ற மாணவி ஜி.ஜோதிமீனா (92.8), 3-ம் இடத்தைப் பிடித்த மாணவர் வி.தமிழ்வானன் (92.357) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர். அதேபோல், 6-ம் இடம் பெற்ற ஏ.ஸ்ரீதேவி, 7-ம் இடத்தைப் பிடித்த ஜி.திருமூர்த்தி, 8-ம் இடம் பெற்ற சி.அபிஷேக் ஆ்கியோரும் இதே கல்லூரியையே தேர்வுசெய்தனர். முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும், மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி, துணை பதிவாளர்கள் எஸ்.கே.அசோக் குமார், டி.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் நாள் அன்று பொதுப்பிரிவில் இடம்பெற்றவர்களுக் கான கலந்தாய்வு நடந்தது. இன் றும் (செவ்வாய்க்கிழமை) அவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.
இதைத்தொடர்ந்து, எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago