சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பின்பற்றாததாலும், சிசிடிவி கேமராக்கல் இல்லாததாலும், இந்த 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக் காட்டிய குறைகளை சரிசெய்துள்ள 3 மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும், அதற்கான அறிக்கையைசமர்ப்பித்தன. மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ)அதிகாரிகள் டெல்லி சென்று விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய குழுவினர்,சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்குநேற்று வந்து, தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள் சரி செய்யப்பட்டுள்ளதா என்று மீண்டும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகளை அதிகாரிகள் குழுவினர் நட்டனர்.
இது தொடர்பாக அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் பாலாஜி கூறும்போது, ‘‘தேசிய மருத்துவ ஆணையம் கூறிய சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கெனவே அறிக்கைஅனுப்பப்பட்டது. தற்போது, வழக்கமான ஆய்வுக்குதான் குழுவினர் வந்துள்ளனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago