சென்னை: “கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?”என்று வேலூர் மாணவியின் தற்கொலையை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
» ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ இன்று பொறுப்பேற்பு?
» “தனியார்மயம் மூலம் ரயில்வேயை தடம்புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும்'' - ஜவாஹிருல்லா
முன்னதாக, சில தினங்களுக்கு முன், வேலூர் மாவட்டம் அருகே உள்ள சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு. இவரது மகள் இந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில், தனது தந்தை தினமும் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்வதால் மனமுடைந்த அவரது மகள், "என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago