உதகை | நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி உரை

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி தலைமையில் தொடங்கியது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் பேசியதாவது; தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு முறையான கல்வி அளிப்பது குறித்த மாநாடு நடக்கிறது. நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படையெடுத்தது.

கால மாற்றத்த்துக்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைகிறது.

இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம்.

தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு, பிற வசதிகள் மேம்பட்டுள்ளன. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3வது இடத்துக்கு இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இதனால் பண்ணாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன.

திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அந்நிய முதலீடுகளை கவர முடியும். இந்தியவால் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு கல்வி முறை காலத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்று இளைஞர்களை திறன் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்

எனவே, தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்