சென்னை - மதுரை விரைவு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தேனி – போடிநாயக்கனுார் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக மாற்றும் பணிகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்.20601), வரும் 16-ம் தேதி முதல் போடிநாயக்கனுார் வரை நீட்டிக்கப்படுகிறது. இது செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து வரும் ரயில் வரும் 18-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலுக்கு வாரம் 3 முறை (செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

இதேபோல, மதுரை – தேனி இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயிலும் போடிநாயக்கனுார் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை மத்திய இணை அமைச்சர் முருகன் வரும் 15-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்