ஓசூர்: பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி எம்பி, கர்நாடக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தினார்.
ஓசூரிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கும், பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு ஏராளமான தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர்.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக பெங்களூரு பொம்மசந்திராவிலிருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் தொடர்ந்து வலியுறுத்தினார். இதையடுத்து, சர்வே பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரை எம்பி செல்லக்குமார் சந்தித்து, பெங்களூரு-ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
» தங்கம் வென்றார் ஹீனா மல்லிக்
» Odisha Train Accident | ரயில்வே அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago