தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து 24.2.1914-ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 1964-ல் டிச.22-ம் தேதி வீசிய கடும் புயலில் துறைமுக நகரமான தனுஷ்கோடி அழிந்தது. இதையடுத்து இந்த மார்க்கத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையே 1965-ல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 400 பேர் செல்லக்கூடிய வகையில் ‘ராமானுஜம்’ என்ற பெயரிலான கப்பல் வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் இருந்து பல வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தலைமன்னார் வரை கப்பலிலும், அதனை தொடர்ந்து ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்று விற்பனை செய்தனர். அதேபோன்று, கொழும்பிலிருந்து எலெட்ரிக்கல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வியாபாரிகள் வாங்கி வந்தனர். இதனால், தென்மாவட்டங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. இந்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் தாக்குதல் உள்நாட்டு யுத்தமாக மாறியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பல் போக்குவரத்து 1983-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
ஸ்காடியா பிரின்ஸ்
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த 13.06.2011-ல் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஸ்காடியா பிரின்ஸ் என்ற 9 அடுக்குகள் கொண்ட பயணிகள் கப்பல், வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்டன. 1,200 பேர் பயணம் செய்யக்கூடிய இக்கப்பல் சேவைக்கு இருநாட்டிலும் அதிக வரவேற்பு இருந்தது. இந்த கப்பல் போக்குவரத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 18.11.2011-ல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
மீண்டும் கப்பல் சேவை
இந்நிலையில், தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவதற்கான ஆவணங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஆவணத்தில், தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவையை தொடங்குவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே கலாச்சார, பொருளாதார தொடர்புகள் மேம்பட வாய்ப்பு ஏற்படும். இரு நாடுகளின் சுற்றுலா, வர்த்தகம், புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், ராமேசுவரம் - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. அதில், தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விரைவில் இரு நாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago